மொழி பெயர்ப்புக் கருவி

Monday, August 15, 2011

யாருக்கு ஞானம் கிட்டும்?பாகம் 8

யாருக்கு ஞானம் கிட்டும்?(பாகம்8)

அன்புள்ள பதிவு வாசகர்களே,


அடுத்து எந்தெந்த ராசியைப் பற்றி அகத்தியர் எவ்வாறு கூறுகிறார்? என்று பார்ப்போம்.


இராசியும் கோளும் ஒத்திருப்பதின் பலனும் அங்கிஷத்தின் அல்லது அமிசையின் பலன்


நன்றான ராசியுமே நாளுமொத்தால்
நரஜென்மம் அல்லவடா சித்தன் சித்தன்
கன்றான கோளொன்றும் ராசியானால்
கண்டுகொள்ளும் அங்கிஷத்தின் பலனைக்கேளு
ஒன்றான கர்க்கடக அங்கிஷத்தில்
உதித்ததுமே யதிலேயே நிற்கவேண்டும்
தண்டான துலாவினது அங்கிஷத்தில்
சகச்சித்தாம் சுக்கிரன் தானிருக்கப்பாரே.
           -அகஸ்தியர் மஹாதிராவகம் 7 -
ராசியும் நாளும் மேற்சொன்னவாறு ஒன்றாக இருந்தால் அவன் சாதாரண நர ஜென்மமல்ல அவன் சித்தனுக்கெல்லாம் பெரிய சித்தனாவான்.கோள்கள் ஒன்றி அததற்குரிய இராசிகளில் அக்கோள்கள் நின்று ஆட்சி பெற்றால் சகச்சித்து சித்தியாகும்.அதாவது எடுத்துக் காட்டாக கடகத்தில் சந்திரன் நின்றால் அது சந்திரனின் ஆட்சி வீடு, துலாம் ராசியில் சுக்கிரன் நின்றால் அது சுக்கிரனின் ஆட்சி வீடு துலாம் ஆகையால் அது சகச்சித்தை சித்தி செய்யும் அமைப்பு.


கிரகங்களின் ஆட்சி,உச்சம்,நீசம்,பகை,நட்பு வீடுகளின் விவரம் கீழே கொடுத்துள்ளேன்.



அடுத்து இதே விஷயத்தின் தொடர்ச்சியை அடுத்த பதிவில் விவரிக்கிறேன்.

மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்

Post Comment

2 comments:

  1. அன்புமிக்க திரு ஜகதீஷ் அவர்களே,
    கருத்துரைக்கு நன்றி!!!!!
    தமிழில் கருத்துரையிடுங்களேன்.நம் தாய் மொழியில் பதிவிட வேண்டும் என்றே மிகக் கடினமாக உள்ள தமிழ்ச் சொற்களை எளிமைப்படுத்தி வெளியிடுகிறேன்.தாங்களும் அம்முயற்சியில் பங்கு கொள்ளுங்கள்.செந்தமிழில் எழுதி பேசினால்தான் தமிழ் வாழும்.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete

உங்கள் கருத்துரைகளால் எம் வலைப்பூ செழுமைப்படட்டும்