மொழி பெயர்ப்புக் கருவி

Sunday, July 31, 2011

சித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 39)


அன்புள்ள பதிவு வாசகர்களே,
இப்போது சிறு குழந்தைகளுக்கு நோய்கள் வராமல் தடுக்கவும்,வந்த நோய்களை விரட்டவும் ஓர் அற்புத பரம்பரை சித்த மருந்துவசாலை தயாரித்தளிக்கும் மருந்துகளைப் பற்றி சொல்லவிருக்கிறேன்.

எனது அம்மாவின் தாத்தா தயாரிக்கும் மருந்துகளில் குழந்தைகளுக்கு கொடுக்கும் தலையாய மருந்துகளும் உண்டு.அவற்றுள் சிறந்த மருந்து பாலாமிர்தம்.

அதை செய்யும் முறை பற்றி எனது முப்பாட்டன் எழுதிய கையெழுத்துப் பிரதியை அப்படியே தருகிறேன்.இதில் ஒரு விடயம் விட்டுப் போய் இருக்கிறது.அரைப்பது 3 நாட்கள் கைவிடாமல் அரைக்க வேண்டும்.பழச்சார் என்பது எலுமிச்சம் பழச்சாறு.

இதில் குறிப்பிட்டுள்ள லிங்கம் என்பது பாஷாணங்கள் 32 னனுள் ஒன்று.இது பழனி நவபாஷாணச் சிலையில் உள்ள நவ பாஷாணங்களுள் ஒன்று.இதை அரைப்பில் கொல்லுதல் என்பார்கள்.அதாவது பாஷாணத்தின் விஷத் தன்மையை 3 நாட்கள் கைவிடாமல் (கைவிடாமல் என்றால் இடைவெளியே இல்லாமல் ஆள் மாறி மாறி அரைப்பது) அரைப்பதின் மூலமாகவே மருந்தாக்குவது.அரைக்கும்போது வலஞ்சுழியாகத்தான் அரைக்க வேண்டும்.அதாவது கோயிலை சுற்றும் போது கடியாரச் சுற்றில் சுற்றுவோமே அது போல.



மேற்கண்ட மருந்துகள் அனைத்தையும் சேர்க்காவிட்டாலும் மேற்குறிப்பிட்டதிலிருந்து சில மருந்துகளைச் சேர்த்து செய்யும் ஒரு பரம்பரை சித்த மருந்துவசாலை பழனி மலையப்பசாமி வைத்தியசாலை.அவர்கள் இதே மருந்தை திரிகடுகு (சுக்கு,மிளகு,திப்பிலி) 60%, ஓமம் 20%,லிங்கம்20% சேர்த்து செய்கிறார்கள்.

அது பற்றிய விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. உபயோகிக்கும் விதமும் ஒவ்வொரு மருந்துக் குப்பியுடன் கொடுக்கப்படுள்ளது.





மேற்கண்ட மருந்துகளை கொடுத்து வந்தால் (PRIMARY COMPLEX, EOSINOPHILIA  ,COUGH) சளி, இருமல், இளைப்பு, காசம், இவை அணுகாது. இது மட்டுமல்ல அவர்களின் புத்திசாலித்தனமும், ஞாபக சக்தியும் அளப்பரியதாக இருக்கும்.எனக்கு என் தாத்தா இந்த மருந்தை எனது ஐந்து வரை கொடுத்ததால்தான் எனது ஞாபக சக்தி மிகச் சிறந்து விளங்குவதைக் காணுகிறேன்.


அது மட்டுமல்ல பின்னாளில் வரும் தோல் வியாதிகளும் வராது தடுக்கப்படும்.காரணம் என்னவென்றால் அல்லோபதி மருந்துகளால் அமுக்கப்படும் நுரையீரல் வியாதிகள் பின்னாளில் தோல் வியாதிகளாக வெளிப்படும்.சளித்தொல்லையை சிறு வயதிலேயே முற்றாக குணப்படுத்துவதின் மூலம் எதிர் கால சந்ததியை ஆரோக்கியமான சந்ததிகளாக உருவாக்கலாம்.அதுவும் இப்போதுள்ள சுற்றுச் சூழல் சீர்கேட்டிலிருந்து குழந்தைகளைக் காப்பது நம் கடன் அதற்கு இந்த மருந்து கைகண்ட மருந்து. 
     
எதிர் காலக் குழந்தைகள் எல்லா உடல் நலமும் மன நலமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.

அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்

Post Comment

No comments:

Post a Comment

உங்கள் கருத்துரைகளால் எம் வலைப்பூ செழுமைப்படட்டும்