மொழி பெயர்ப்புக் கருவி

Sunday, March 20, 2011

ஒரு பழம் பெரும் புத்தகம் (கடுக்காய் பிரபாவ போதினி பாகம் 4)

ஒரு பழம் பெரும் புத்தகம்,(கடுக்காய் பிரபாவ போதினி பாகம் 3) என்ற பதிவைப் படித்துவிட்டு இந்த பதிவுக்கு வரவும்.அப்படிப் படித்தால்தான் தொடர்பு விட்டுப் போகாமல் புரியும்.


கடுக்காயின் உட்கொட்டையயும் மேற் தோலையும் நீக்கிவிட்டு கடுக்காயின் சதைப்பற்றான பகுதியை மட்டும் எடுத்து இடித்து(மிக்ஸியிலோ, மில்லிலோ கொடுத்து அரைக்கக் கூடாது,சூரணம் சூடானால் அதன் மருந்துத் தன்மை இழந்துவிடும்,கடைகளில் விற்கும் சூரணமொ,பொடிகளோ இது போன்ற பக்குவத்தில் செய்ய மாட்டார்கள்,செய்தால் அவர்களுக்கு கட்டுபடி ஆகாது,மொத்தக் கடுக்காயையும் போட்டு அரைத்தால்தான் கட்டுப்படியாகும்), வஸ்திரகாயஞ் செய்து (துணியில் சலித்து) வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.


மேற்படி கடுக்காய்ப் பொடியில் முக்கால் விராகனிடை(ஒரு விராகன்= 4.16 கிராம் எனில் முக்கால் விராகனிடை என்பது 3.12 கிராம் ) மேற்கண்ட அனு பான விஷேஷங்களிற் சாப்பிட வேண்டும்.மேற்குறிப்பிட்ட மாத இடைவெளிக் கால அளவு முழுவதும் சாப்பிட்டால் நன்று. குறைந்த பட்சம் 14 நாட்கள் சாப்பிட வேண்டும். அப்படியும் செய்ய இயலாதவர்கள் எவ்வேழு நாட்களாவது  சாப்பிட்டு வர வேண்டும்.


இப்படிச் செய்வதால் தேக சுகம் நிலைத்திருக்கும், வேறு வியாதிகளுண்டாகா!! மலங் கிரமப்பட்டு(நாளுக்கிரு முறை), இரைப்பை முதலான இராஜ கருவிகளின் தொழிலுங் கிரமப்பட்டு வரும்.


இனி கடுக்காயை காலத்திற்கேற்றார் போல பல வகை அனுப்பானங்களுடன் ஏன் கலந்து உபயோகிக்க வேண்டுமென்பதை அடுத்த பதிவிலிருந்து பார்க்கலாம்
      

இதன் தொடர்ச்சி ''ஒரு பழம் பெரும் புத்தகம்,(கடுக்காய் பிரபாவ போதினி பாகம் 5)'' என்ற பதிவில் தொடரும்.

அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்

Post Comment

4 comments:

  1. கடுக்காயை மிக்சியில் அரைக்க கூடாதா ?
    இனிமேல் இடிச்சிறுவோம்

    தொடருங்கள் ஜி

    ReplyDelete
  2. கடுக்காயின் மேல் தோலை மட்டுமே உபயோகிக்க வேண்டு மென்று படித்திருக்கிறேன் ஆனால் இந்த பதிவில் அது எதையும் குறிப்பிடவில்லையே? தவறு ஏற்கெனெவே படித்ததிலா அல்லது இந்த பதிவிலா என்பதை பதிவாளர் விவரித்தாரானால் நன்மை. இல்லையானால் உடல் நிலைக்கு கேடாகி விடுமே!

    ReplyDelete
  3. கடுக்காயின் உட்பருப்பையும்,மேற்றோலையும் நீக்கிவிட்டு,சதைப் பகுதியை மட்டும் என்று தெளிவாகக் கொடுத்துள்ளேன் கவனிக்கவில்லையா?கடுக்காயின் தோல் மற்றும் சதைப்பற்றான பகுதியும் பொதுவாக மருந்துக்கு உபயோகிப்பார்கள்.கொட்டையை எப்போதும் நீக்கிவிடுவார்கள்.ஆனால் இது வருடம் பூராவும் உபயோகிக்கும் கற்பத்துக்கு என்பதால் சதைப்பகுதியை மட்டும் எடுத்துக் கொள்ளச் சொல்லி இருக்கிறது.கடுக்காய்க்கு அக நஞ்சு, இஞ்சிக்கும்,சுக்குக்கும் புற நஞ்சு அதாவது தோலில் நஞ்சு.இது நஞ்சென்றால் அதன் மருந்துத் தன்மையை முறிப்பது என்றுதான் கொள்ள வேண்டுமேயல்லாது இஞ்சித்தோலை சாப்பிட்டால் உயிர் போய்விடுமா என்று கேட்கக்கூடாது. சாதாரணமான உணவுப் பொருட்களின் மருந்துத் தன்மையை அதிகரிக்கவே இந்த நஞ்சுப்பகுதியை நீக்கும் வழிகள்.எனவே வீணாக கற்பனை செய்து உடல் நிலை கேடடைந்து விடுமோ என்றெல்லாம் அஞ்ச வேண்டாம்.ஆங்கில மருந்துகளின் கடுமையான தீய விளைவினால்(முழு விபரங்கள் என்னுடைய முந்தைய பதிவுகளில் காணலாம்) உண்டாகும் கொடுமையெல்லாம் நம் நாட்டு மருந்துகளில் இல்லை.அந்த ஆங்கில மருந்துகளை எவ்வித கேள்வியும் கேட்காமல் வாயில் போட்டுக் கொள்ளும் நமக்கு இது போன்ற சந்தேகங்கள் நாட்டு மருந்தின் மீது வருவதுதான் பெரும் வேடிக்கை. கடுக்காய் , இஞ்சி, சுக்கு இவற்றை நீங்கள் தவறாகவே சாப்பிட்டாலும் நஞ்சாகாது, சாதாரண உணவாக மாறிவிடும். எனவே அஞ்சாதீர்கள்.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  4. விராகனிடை ஒரு விராகன்= 4.16 கிராம்
    தேடியது நன்றி

    ReplyDelete

உங்கள் கருத்துரைகளால் எம் வலைப்பூ செழுமைப்படட்டும்