மொழி பெயர்ப்புக் கருவி

Wednesday, January 26, 2011

சித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(24)(மனையடி சாஸ்திரம் என்ற வாஸ்து சாஸ்திரம் பாகம் 5)

 வாஸ்து சாஸ்திரம் என்று அழைக்கப்படும் மனையடி சாஸ்திரம் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.இந்தப் பதிவு சித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(22)(மனையடி சாஸ்திரம் என்ற வாஸ்து சாஸ்திரம் பாகம் 4) ன் தொடர்ச்சியே!!! அதைப் படித்துவிட்டு பின் இந்தப் பதிவுக்கு வாருங்கள்.அப்போதுதான் தொடர்பு விட்டுப் போகாது புரியும்.


வாஸ்து புருஷன் தன் தலையை புரட்டாசி,ஐப்பசி கார்த்திகை மாதங்களில் கிழக்கில் தலை வைத்துப் படுத்திருப்பார்.


மார்கழி,தை, மாசி மாதங்களில் தெற்கில் தலை வைத்துப் படுத்திருப்பார்.


பங்குனி,சித்திரை,வைகாசி மாதங்களில் மேற்கில் தலை வைத்துப் படுத்திருப்பார்.


ஆனி,ஆடி,ஆவணி,மாதங்களில் வடக்கில் தலை வைத்துப் படுத்திருப்பார்.


வாஸ்து புருஷன் பார்க்கும்(திருஷ்டி) திசையிலாவது, கால் புறம் உள்ள திசையிலாவது வாசல் வைத்து வீடுகட்ட கூடாது.அதாவது வாஸ்து செய்யும் எல்லாக் கிழமைகளிலும் எல்லா திசைகளிலும் வாசல் வைப்பவர்களும் வீடு கட்ட ஆரம்பிக்கக் கூடாது.


(எ-கா) புரட்டாசி,ஐப்பசி மாதங்களில் கிழக்கில் தலை வைத்துப் படுத்திருந்தால் கால் மேற்கில் இருக்கும். மேலும் தெற்கே பார்த்துப் படுத்திருப்பார்.எனவே தெற்கு வாசல் மற்றும் மேற்கு வாசல் காரர்கள் இந்த மாதங்களில் வாஸ்து செய்யக் கூடாது.கிழக்கு மற்றும் வடக்கு வாசல்காரர்கள் இந்த மாதங்களில் வாஸ்து செய்யலாம்.
  
வாஸ்து புருஷன் சூரியன் நிற்கும் ராசிகளில் காலும்,அதற்கு எதிர்ராசிகளில் தலையும் வைத்துக் கொண்டு,இடது கை கீழும் வலது கை மேலுமாக படுத்திருப்பார்.


சூரியனும், வாஸ்து புருஷனும் ,எதிர் எதிராக ராகு கேதுவைப் போல் இருப்பதனால், சூரிய சக்தி எந்த மாதங்களில் தலைவாயிலில் நுழையுமோ,அந்த மாதங்களில்தான் அந்தந்த திசையில் தலை நுழைவாயில் அமைக்கவுள்ள வீட்டுக்கு கால்கோள் இட வேண்டும்.

இப்போது இன்னோர் விடயமும் கூறுகிறேன்.சூரியன் எந்த ராசிக்கட்டத்தில் இருக்கிறதோ அதை வைத்தே நீங்கள் பிறந்த மாதத்தை கூறிவிடலாம்.


சித்திரை = மேடத்தில் சூரியன்
வைகாசி = ரிடபத்தில் சூரியன்
ஆனி = மிதுனத்தில் சூரியன்


ஆடி = கடகத்தில் சூரியன்(கடக ரேகையை நோக்கி சூரியன் நகர்வதால் இது தட்சியாண கால ஆரம்பம்.  ஆடி மாதத்தில் இருந்து மார்கழி வரை தட்சிணாயனம். இந்த மாதங்களில் குளிர்ச்சி இருக்கும்.)
ஆவணி = சிம்மத்தில் சூரியன்
புரட்டாசி = கன்னியில் சூரியன்
ஐப்பசி = துலாத்தில் சூரியன்
கார்த்திகை=விருச்சிகத்தில் சூரியன்
மார்கழி = தனுசு ராசியில் சூரியன்


தை = மகரத்தில் சூரியன்(மகரத்தில் சூரியன் நுழைவதால் இதுவே மகர சங்கராந்தியாகவும், சூரியனுக்கு விவசாயப் பெருமக்கள் ந்ன்றி சொல்லும் தமிழர் திருநாளாகவும் கொண்டாடப்படுகிறது.இதுவே உத்தராயண(சூரியன் மகர ரேகையில் பிரவேசிக்கும் காலம்) கால ஆரம்பம்.தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உத்தராயனம். இந்த மாதங்களில் அதிக சூடு இருக்கும்.)


மாசி = கும்ப ராசியில் சூரியன்
பங்குனி = மீன ராசியில் சூரியன்


இப்படியே சூரியன் நிற்கும் ராசிக் கட்டத்தை வைத்து நீங்கள் பிறந்த மாதத்தை கூறிவிடலாம்.



பதிவின் தொடர்ச்சி சித்தர்களின் விஞ்ஞானம் (மனையடி சாஸ்திரம் என்ற வாஸ்து சாஸ்திரம் பாகம் ஐந்தில் காணுங்கள்)

அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்  

Post Comment

No comments:

Post a Comment

உங்கள் கருத்துரைகளால் எம் வலைப்பூ செழுமைப்படட்டும்