மொழி பெயர்ப்புக் கருவி

Sunday, October 31, 2010

ஒரு குட்டிச் சித்தர்


எனது குல தெய்வம் அழிசோடைக் கருப்பசாமி, இராஜபாளையத்தில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தள்ளி காட்டுக்குள்,மலை அடிவாரத்தில் இருக்கிறது.எங்களது குடும்பத்தைச் சேர்ந்த 7 குடும்பங்களுக்கு மட்டுமே அங்கே பூஜைப் பாத்தியதை உண்டு(பூஜை செய்யும் உரிமை).


அந்தக் காலத்தில் பெரும் காடாய் இருந்த இடம்தான் இந்தக் கோயில். இதனால் கருப்பசாமி எங்கள் 7 குடும்பத்துக்கும் ஒரு வரம் அருளியிருக்கிறார்.அதன்படி பூஜை புரிய வரும்போது காட்டு விலங்குகளாலோ,இயற்கை சீற்றங்களாலோ எங்கள் உயிருக்கு அபாயம் நேராது என்று வரம் அருளியிருக்கிறார்.

எனது தம்பியும் நானும் எங்களது குடும்பத்துடன் மேற்படி குல தெய்வக் கோயிலுக்குச் சென்றிருந்தோம்.அங்கு எனது தம்பியின் பையன் குட்டிச் சித்தர் போல கைகளை வைத்துக் கொண்டு தன்னை படம் எடுக்கச் சொன்னார்.அப்போது எடுத்த படம்தான் இது.

அவருக்கு இன்று பிறந்த நாள் .எனது வலைப் பூவின் வாசக அன்பர்களோடு என் வாழ்த்துக்களும் அவருக்கு சேரட்டும்.பின்னாள் ஞானிக்கு இந்நாள் ஞானிகளின் வாழ்த்துக்கள்.


அவர் உட்கார்ந்திருக்கும் நிலை கைகளை வைத்திருக்கும் முறை போன்றவற்றை ஊன்றிக் கவனியுங்கள்.இது போல் இருக்க வேண்டும் என்று நாங்கள் ஏதும் கூறாமலே அவர் இது போல் பாவனை செய்கிறார்.
பின்னால் இருக்கும் படம் சில கோவில்களில் நீங்கள் பார்த்திருக்கலாம்.அது ஸகஸ்ரார சக்கரத்தைக் குறிக்கும்.ஞானம் அடையும் நிலையை அடைவதற்கு அடையாளமாக தலைக்கு மேல் மூன்று சக்கரங்கள் தோன்றும்.அதன் பிரகாசம் சில சமயம் புகைப் படங்களிலும் தெரிவதுண்டு.பின்னொரு சமயம் அது உரியவர்களின் அனுமதியோடு பிரசுரிக்கப்படும்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
அன்பன்
சாமீ அழகப்பன்

Post Comment

4 comments:

  1. குட்டி சித்தர்ருக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் !!!

    ReplyDelete
  2. மிக்க நன்றி திருபுலிப்பாணி அவர்களே,
    தங்கள் வாழ்த்தும், ஆசீர்வாதமும் அவருக்கு சேரட்டும்.இன்று போனஸ் இடுகையாக இரண்டு இடுகைகள் வெளியிட்டு இருக்கிறேன்.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  3. Many More Happy Returns of the Day. May God Bless Him.

    Regards,
    M. Vijay

    ReplyDelete
  4. மிக்க நன்றி திரு விஜய் அவர்களே,
    தங்கள் வாழ்த்தும், ஆசீர்வாதமும் அவருக்கு சேரட்டும்.இன்று போனஸ் இடுகையாக மூன்று இடுகைகள் வெளியிட்டு இருக்கிறேன்.பார்த்து பின் கருத்துக்களையும் எழுதுங்கள்.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete

உங்கள் கருத்துரைகளால் எம் வலைப்பூ செழுமைப்படட்டும்