மொழி பெயர்ப்புக் கருவி

Sunday, August 1, 2010

சித்தர்களின் சாகாக்கலை(மரணமில்லாப் பெருவாழ்வு)3


ஆத்தி சூடி இளம்பிறை அணிந்து மோனத்திருக்கும் முழுவெண்மேனியான்(சிவன்)
கருநிறம் கொண்டு பாற்கடல் மிசை கிடப்போன்(கண்ணன்),
மஹமது நபிக்கு மறையருள் புரிந்தோன் (அல்லா)
ஏசுவின் தந்தை எனப்பல மதத்தினர்(பரம பிதா)
உருவகத்தாலே உணர்ந்து உணராது
பலவகையாகப் பரவிடும் பரம்பொருள் ஒன்றே
அதனியல் ஒளியுறும் அறிவாம்
அதனிலை கண்டார் அல்லலை அகற்றினார்
அதனருள் வாழ்த்தி அமர வாழ்வு எய்துவோம்.
(நன்றி   பாரதியார்)


சைவத்தில் ஆத்தி சூடி இளம்பிறை அணிந்து மோனத்திருக்கும் முழுவெண்மேனியானான சிவன்,வைணவத்தில் கருநிறம் கொண்டு பாற்கடல் மிசை கிடப்போனான  கண்ணன்,முஸ்லீம் மதத்தில் மஹமது நபிக்கு மறையருள் புரிந்தோனான அல்லா,கிறித்துவ மதத்தில்ஏசுவின் தந்தை(பரம பிதா) எனப்பல மதத்தினர் உருவகம் செய்து கொள்கின்றனர்



உருவகத்தால் மட்டும் உணர்ந்து கொண்டு,அதன் உண்மை நிலை அறியாது இருக்கிறார்கள். இப்படி பலவகையாக பரவி நிற்கும் பரம்பொருள் ஒன்றே. அதனிலை தெரிந்து கொள்வதுதான் ஒளி பொருந்திய அறிவு (மற்றைய அறிவெல்லாம் இருள் அறிவு).அதனிலை தெரிந்து கொண்டவர்கள் உலகத்தில்
உள்ள அல்லல்களையெல்லாம் அகற்றிக் கொண்டவர்கள்,மற்றவர்களின் அல்லல்களை அகற்றுபவர்கள்(அவர்கள்தான் சித்தர்கள்).

அந்த ஒளி பொருந்திய அருட்பெருஞ்சோதி   ஆண்டவரை வேண்டி வழிபட்டு
(எனில் அவர் நம்முடலில் இருக்குமிடம் தெரிந்து)அமர வாழ்வான மரணமில்லாப் பெருவாழ்வு வாழ்வோம்.

மீண்டும் சாகாக்கலை(மரணமில்லாப் பெருவாழ்வு)4 ல் சந்திப்போம்

நன்றி சாமீ அழகப்பன்


Post Comment

No comments:

Post a Comment

உங்கள் கருத்துரைகளால் எம் வலைப்பூ செழுமைப்படட்டும்